Breaking News

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை மையம் அறிவிப்பு.!

NEWS COVER
0
தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.! வானிலை மையம் அறிவிப்பு.!
GET NEWS COVER

 தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும்,

மேலும் இன்று ( 06.06.2024) திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர், கரூர், திருச்சி, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டம் மலைப்பகுதிகள், தேனி, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய 19 மாவட்டங்களில் இன்று ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் மேலும் இதேபோன்று ஜூன் 7 முதல் 12-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.




Tags: வானிலை செய்திகள்