Breaking News

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்.! இன்று விடுதலை..

NEWS COVER
0

டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இன்று விடுதலை..! முழு விவரம்.!

GET NEWS COVER
 அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.அதனால் அவர் இன்று விடுதலை ஆகிறார்.

 மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்க துறையால் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அவர் இடைக்கால ஜாமீன் பெற்று வந்து தனது கட்சிக்காக தீவிர பிரச்சாரம் செய்தார். நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அவர் மீண்டும் திகார் சிறையில் ஆஜரானார். இந்நிலையில் நேற்று டெல்லி நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது அப்போது அவர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் தெலுங்கானா நிறுவனத்திடம் இருந்து 100 கோடி வந்ததற்கான எந்தவித ஆதாரமும் இல்லை என வாதிட்டார். அதனை ஏற்று நீதிமன்றம் நேற்று இரவு 8 மணிக்கு அவருக்கு ஜாமீன் வழங்கியது.  இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று விடுதலை ஆகிறார்.

Tags: தேசிய செய்திகள்