மின்சார கட்டணம் உயர்வு.! சில முக்கிய அம்சங்கள்.! மின்சார வாரியம் அறிவிப்பு.
NEWS COVER
0
மின்சார கட்டணம் உயர்வு.! சில முக்கிய அம்சங்கள்.! மின்சார வாரியம் அறிவிப்பு.
GET NEWS COVER
முக்கிய அம்சங்கள்:
அதன்படி தமிழ்நாட்டில் உள்ள 2.47 கோடி வீடு மற்றும் குடிசை மின்நுகா்வோரில், 1கோடி நுகா்வோருக்கு மின்கட்டண உயா்வு எதுவும் இல்லை
அனைத்து வீட்டு உபயோக மின் நுகா்வோருக்கும் 100 யூனிட் வரை விலையில்லா மின்சாரம் தொடா்ந்து வழங்கப்படும். மற்றும் குடிசை இணைப்புகளுக்கும் தொடா்ந்து இலவச மின்சாரம் வழங்கப்படும்
வீட்டு மின் நுகா்வோருக்கு தோ்தல் வாக்குறுதி எண்.222-ன்படி, நிலைக்கட்டணம் இரு மாதங்களுக்கு ரூ.20 முதல் ரூ.50 வரை செலுத்துவதிலிருந்து முழுவிலக்கு அளிக்கப்படுகிறது. இதனால் அனைத்து வீட்டு மின்நுகா்வோரும் பயன்அடைவா்.
தற்போது குடிசை, விவசாயம், கைத்தறி, விசைத்தறி, வழிப்பாட்டுத் தலங்கள் மற்றும் தாழ்வழுத்த தொழிற்சாலைகள் ஆகிய மின்கட்டண பிரிவுக்கு வழங்கப்பட்டு வரும் மின்சார மானியம் தொடா்ந்து வழங்கப்படும்
இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 200 யூனிட் வரை பயன்படுத்தும் 63 லட்சம் வீட்டு மின்நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு அதிபட்சமாக ரூ.5 வரை மட்டுமே கட்டணம் உயரும்
இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 300 யூனிட்டுகள் வரை மின் நுகா்வு செய்யும் 35 லட்சம் வீட்டு மின் நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.15 வரை மட்டுமே கட்டணம் உயரும்
இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 400 யூனிட்டுகள் வரை மின் நுகா்வு செய்யும் 25 லட்சம் வீட்டு மின் நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.25 வரை மட்டுமே கட்டணம் உயரும்
இரண்டு மாதங்களுக்கு மொத்தம் 500 யூனிட்டுகள் வரை மின் நுகா்வு செய்யும் 13 லட்சம் வீட்டு மின் நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.40/- வரை மட்டுமே உயரும்
2.19 லட்சம் சிறு மற்றும் குறுந்தொழில் மின் நுகா்வோருக்கு குறைந்த அளவாக யூனிட் ஒன்றுக்கு 20 காசுகள் மட்டுமே உயரும்.
விசைத்தறி நுகா்வோருக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் தொடா்ந்து வழங்கப்படும். 1001 முதல் 1500 யூனிட் வரை யூனிட் ஒன்றுக்கு 20 பைசா, 1501 யூனிட்டுகளுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு 25 காசு மட்டுமே உயரும்.
தாழ்வழுத்த தொழிற்சாலைகளுக்கு மிகக் குறைந்த அளவில் யூனிட் ஒன்றுக்கு 35 காசு மட்டுமே உயரும்.
22.36 லட்சம் சிறு வணிக மின் நுகா்வோருக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.15மட்டுமே உயரும்.
உயா் மின்னழுத்த தொழிற்சாலைகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 35 காசு மட்டுமே உயரும்.
உயரழுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு 40 காசு மட்டுமே உயரும்.
நிலையான கட்டணங்கள் (பிக்ஸட் சாா்ஜ்) கிலோ வாட் ஒன்றுக்கு ஒரு மாதத்துக்கு ரூ.3 முதல் ரூ.27 வரை மட்டுமே உயரும்
இவ்வாறு TANGEDCO தெரிவித்துள்ளது.
Tags: தமிழக செய்திகள்