விரைவில் தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகம்.! பொதுச்செயலாளர் தகவல்..!
NEWS COVER
0
விரைவில் தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுகம்.! பொதுச்செயலாளர் தகவல்..!
GET NEWS COVER
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என அக்கட்சியின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்னும் புதிய அரசியல் கட்சியினை தொடங்கியுள்ளார். அதன் மூலம் தமிழ்நாட்டில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பல்வேறு ஊக்கத் தொகைகளையும் வழங்கி வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளரான புஸ்ஸி ஆனந்த் தனது பிறந்தநாளை நேற்று தொண்டர்களுடன் கொண்டாடினார்.
அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அவர் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
கட்சியான
Tags: தமிழக செய்திகள்