காரில் வந்தவருக்கு ஹெல்மெட் பைன் போட்ட இன்ஸ்பெக்டருக்கு 1 லட்சம் அபராதம் !!! அதிரடி காட்டிய நீதிமன்றம்.... GET NEWS COVER காரில் வந்த வழக்கறிஞருக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று 100 ரூபாய் அபராதம் விதித்த இன்ஸ்பெக்டர் சிலைராஜன் என்பவருக்கு மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றம் 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. தேனி உத்தமபாளையம் காவல் நிலையத்தில் தற்போது ஆய்வாளராக இருப்பவர் சிலைமணி. கடந்த 2018 ம் ஆண்டில் அவர் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரிந்த சமயத்தில் வாகனத்தணிக்கை செய்து கொண்டிருக்கும் போது அந்த வழியாக வெள்ளையாபுரத்திற்கு காரில் வந்த சிவன்ராஜ் என்ற வழக்கறிஞரின் காரை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது ஏற்பட்ட வாக்குவாதத்தில் காரில் பயணித்த முகமது யாசிர் என்பவரை ஆய்வாளர் சிலைமணி, தாக்கினார் பின்னர் 2000 ரூபாய் லஞ்சம் ஆக பெற்றுக்கொண்டு ஹெல்மெட் அணியாமல் போக்குவரத்து விதிகளை மீறியதாக 100 ரூபாய் அபராத ரசீதை வழங்கினார். இதையடுத்து வழக்கறிஞர் சிவன் ராஜ் மாநில மனித உரிமை ஆணையத்தில் இதுகுறித்து வழக்கு தாக்கல் செய்தார். வழக்கினை விசாரித்த நீத
புதுமை பெண் திட்டம்!! நவம்பர் 1 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு. GET NEWS COVER அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.முக.ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்டது. இதுவரை 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகை பெற்று பயனடைந்துள்ளனர் மேலும் தற்போது வரும் நவம்பர் 1ம் தேதி முதல் இந்த உதவித்தொகையை பெற தமிழக அரசின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு; https://www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கவும்.
ஜனவரி மாதமே கடைசி!! மின் இணைப்பில் ஆதார் இணைக்க காலக்கெடு!! GET NEWS COVER தமிழகத்தில் மின்சார நுகர்வோர்கள் தங்களது மின் இணைப்புடன் தங்களது ஆதார் எண்ணை இணைக்கும் நடவடிக்கை தற்போது நடந்து வருகிறது. மின் நுகர்வோர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைக்க வரும் 2023 ஜனவரி மாதம் கடைசி என தமிழ்நாடு மின்சார வாரியம் காலக்கெடு நிர்ணயித்துள்ளது. மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே இனி மின் கட்டணம் செலுத்த முடியும். மின் இணைப்புடன் ஆன்லைன் மூலம் இணைக்க http://www.tnebltd.gov.in/adharupload/adhaentry.xhtml என்ற இணையதள முகவரியில் சென்று இணைத்துக் கொள்ளலாம்.
Comments
Post a Comment