Posts

Showing posts from September, 2022

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

Image
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!   GET NEWS COVER தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி, சென்னை,  காஞ்சிபுரம்,  ராணிப்பேட்டை,  செங்கல்பட்டு,   ஈரோடு,  திருப்பத்தூர்,  வேலூர்,  சேலம்   ஆகிய மாவட்டங்களில் 9 அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் தலைநகர் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி! செப் 15 முதல் தொடக்கம்.

Image
அரசு தொடக்கப் பள்ளிகளில் காலை.. சிற்றுண்டி திட்டம்.  . GET NEWS COVER        09.09.2022 .. அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின்  வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள அரசினர் தொடக்கப் பள்ளிகளில் 1 ம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ மற்றும்  மாணவிகளுக்கு அனைத்துப் வேலை நாட்களிலும் காலை சிற்றுண்டியை வழங்கிட வேண்டும் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்  முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மொத்தம் 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட உள்ளது.   தமிழக அரசு இதற்காக 33.56 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது.  இதன்மூலமாக 1.14 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவர். அதன் பின்னர் இந்த திட்டம்  தமிழகம் முழுவதும் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது.  இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான வருகிற செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரையில் துவக்கி வைக்கிறார்.

ஆதரவற்ற மகளிர் மற்றும் கைம்பெண்களுக்கு நல வாரியம்! தமிழக அரசு அரசாணை.

Image
ஆதரவற்ற பெண்கள் மற்றும் கைம்பெண்கள் நலவாரியம்! தமிழக அரசு அரசாணை. GET NEWS COVER ஆதரவற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்கள் நல வாரியம் அமைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் பாதுகாப்பான முறையில் வாழ்வதை உறுதிசெய்ய தனி நல வாரியம் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு  மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  திருமதி.கீதா ஜீவன் அறிவித்தார். அதன்படி ஆதரவற்ற மகளிர் மற்றும் விதவைகள் நல வாரியம் அமைக்க அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இதனால் சமூக நலவாரியம் கலைக்கப்பட்டு  அதனுடைய செயல்பாடுகள் அனைத்தும் ஆதரவற்ற பெண்கள் மற்றும் கைம்பெண்கள் நல வாரியத்துடன் இணைக்கப்படும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு 9 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!

Image
ஓணம் பண்டிகை! 9 மாவட்டங்களுக்கு விடுமுறை! தமிழக அரசு அறிவிப்பு ஓணம் பண்டிகை வரும் செப்டம்பர் 8 ம் தேதி நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வாழும் மலையாள மக்களும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொணடாடிடும் வகையில் ஒவ்வோரு ஆண்டும் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் அரசு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில்  ஏற்கனவே சென்னை, கன்னியாகுமரி, திருப்பூர், நீலகிரி, கோவை ஆகிய 5 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் நேற்று மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களுக்கும் சேர்த்து விடுமுறையை தமிழக அரசு அறிவித்திருக்கிறது.

நாளையும் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Image
நாளையும் கனமைழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு GET NEWS COVER               01.09.2022 தமிழகத்தில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை உள்ளிட்ட 18  மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் இன்று கனமழை பெய்தது. இந்நிலையில்  தமிழகத்தில் நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்  மேலும்திருப்பூர்,தேனி,சேலம், திண்டுக்கல், ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், மதுரை,திருச்சி, பெரம்பலூர், விருதுநகர், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.