Posts

Showing posts from March, 2023

கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு 50 ஆயிரம் கல்வி உதவித்தொகை

Image
கட்டுமான தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 50 ஆயிரம் கல்வி உதவித்தொகை  GET NEWS COVER அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் இந்திய தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் ஐஐஎம் போன்றவைகளில் சேரும் கட்டுமானத் தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.  தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற  தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தில் இதில் உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் சி.வி.கணேசன் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் புதிதாக 12 லட்சத்து66 ஆயிரத்து 126 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்து 56 ஆயிரம் தொழிலாளர்களுக்கு ரூ.725 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்றும்  மேலும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்களில் பதிவுபெற்ற தொழிலாளர்களுக்கு மூக்குக் கண்ணாடிக்கான உதவித்தொகை ரூ.500-லிருந்து 750 ரூபாயாக உயர்த்தப்படும் என்றும் மேலும் அவர்களின் குழந்தைகள் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க 25 ஆயிரமும், சர்வதேச அளவிலான ப

குரூப் 4 தேர்வு! ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 742 பேர் தேர்ச்சி விவகாரம்!! பயிற்சி மையம் விளக்கம்.

Image
குரூப் 4 தேர்வு! ஒரே பயிற்சி மையத்தை சேர்ந்த 742 பேர் தேர்ச்சி விவகாரம்!! பயிற்சி மையம் விளக்கம். GET NEWS COVER தமிழ்நாடு அரசின் நில அளவர் பணிக்கான குரூப் 4 தேர்வில் ஒரே தனியார் பயிற்சி மையத்தை சேர்ந்த 742 பேர் தேர்ச்சி பெற்ற விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஜூலை 24 ம் தேதி நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மையத்தின் குரூப்4 தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் இதில் தேர்ச்சி பெற்றவர்களில் 742 பேர் காரைக்குடியில் உள்ள பிரமிட் தனியார் பயிற்சி மையத்தில் பயின்ற விவரம் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் தமிழக சட்டமன்றத்திலும் இந்த விவகாரம் எழுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து மேற்படி தனியார் பயிற்சி மையத்தின் இயக்குனர் தற்போது விளக்கம் அளித்துள்ளார் அதன்படி தற்போதைய நில அளவர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அத்தனை பேரும் ஏற்கனவே குரூப்-1 தேர்வுக்காக பயிற்சி எடுத்து வந்தவர்கள் என்றும் அவர்களுக்கு குரூப் 4 தேர்வு எளிதான தேர்வாக இருந்ததால் அவர்களால் வெற்றி பெற முடிந்தது எனவும் தங்கள்

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!! வானிலை மையம் அறிவிப்பு.

Image
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு! GET NEWS COVER  வளிமண்டல கீழ் அடுக்குகளில் கிழக்கு மேற்கு காற்று சந்திக்கும் பகுதியின் நிலை வருகிறது. அதன் காரணமாக  தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகின்றது.  மேலும் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு 14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது. அதன்படி, கோவை நீலகிரி,  திருப்பூர், ஈரோடு கிருஷ்ணகிரி, தர்மபுரி திருப்பத்தூர்,  வேலூர்,  திருவண்ணாமலை ராணிப்பேட்டை,  திருவள்ளூர், காஞ்சிபுரம்,  சேலம்,  மற்றும் கன்னியாகுமரி  ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆவண எழுத்தர் கட்டண ரசீது கட்டாயம்! பதிவுத்துறை உத்தரவு!!

Image
ஆவண எழுத்தர் கட்டண ரசீது கட்டாயம்! பதிவுத்துறை உத்தரவு!! GET NEWS COVER சொத்துக்களை பத்திரபதிவு செய்யும்போது, அதில் ஆவண எழுத்தரின் கட்டண ரசீது கட்டாயம் இருக்க வேண்டும் என, பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது பத்திரப்பதிவு செய்யும் பணிகள் அனைத்தும் ஆன்லைன் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.  எனினும் ஒரு சில ஆவணங்கள் ஆவண எழுத்தர் மூலமாகவே மேற்கொள்ளப் படுகின்றன. தழிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி சுமார் 5,000க்கும் மேற்பட்ட பதிவுபெற்ற ஆவண எழுத்தர்கள் உள்ளனர். மேலும் பல இடங்களில் இதற்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்பான புகார்கள் உள்ளன. எனவே இனிமேல் பத்திரபதிவுக்கு வரும் ஆவணங்களில் ஆவண எழுத்தர்களுக்கு எவ்வளவு கட்டணம் வழங்கப்பட்டது என்பதற்கான ரசீது கட்டாயம் இணைக்கப்பட வேண்டும் என்று  கடந்த ஆண்டே பதிவுத்துறையால்  உத்தரவிடப்பட்டது.   ஆனாலும் இந்த நடைமுறையை சரிவர பல இடங்களில் கடைபிடிக்கவில்லை. இது தொடர்பாக பதிவுத்துறை தலைவர் சிவன் அருள் அனைத்து சார் பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் இனிமேல் பத்திர பதிவுக்கு வரும் பத்திரங்களில் ஆவண எழுத்தர் எவ்வளவு கட

அதிகரிக்கும் கோடை வெயில்!! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுரை.!!

Image
அதிகரிக்கும் கோடை வெயில்!! தமிழ்நாடு மின்சார வாரியம் நுகர்வோர்களுக்கு அறிவுரை!! GET NEWS COVER த மிழகத்திில் தற்போோதுு கோடைை காலம் துவங்கிியுுள்ளது. கோடைை வெயிிலைை சமாளிிக்க மக்கள் அனைவரும் வீ டுகளில் ஏசி ஃபேன் போன்றவற்றை பகல் நேரங்கள் மற்றும் இரவு நேரங்களிலும் தொடர்ந்து பயன்படுத்த தொடங்கியுள்ளனர். மேலும் அடுத்ததடுத்த மாதங்களில் வெப்பநிலை மேலும் உயரக்கூடும் என்பதால் மேற்படி ஏசி மற்றும் ஃபேன் பயன்பாடுகள் கணிசமாக உயர வாய்ப்புள்ளது. இதற்கான மின் தேவையும் வரும் மாதங்களில் கடுமையாக உயர வாய்ப்புள்ளது.  தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. மேலும் கோடைகாலங்களில் வீடுகள் கடைகள், அலுவலகங்கள், மற்றும் நிறுவனங்கள் போன்றவற்றில் ஏசி மற்றும் ஃபேன் மற்றும் ஃபிரிட்ஜ் போன்றவைகளின் அதிகப்படியான பயன்பாடு காரணமாக சராசரி அளவை விட அதிக மின் தேவை ஏற்படுகிறது. எனவே மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு மின்வாரிய அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  இல்லையெனில்,கோடைக்காலத்தில் மின் பற்றாக்குறை அதிகளவு ஏற்பட்டு மின்வெட்டு ஏற்படக்கூடும் என தமிழ்நாடு ம