Posts

Showing posts from August, 2022

ஆதார் கார்டுடன் பான் கார்டு இனைக்க

Image
ஆதார் எண்ணுடன் பான் எண்ணை  இணைக்க ✍ * பான் அட்டையிலும், ஆதார் அட்டையிலும் ஒரே மாதிரியாக பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி,மாதம்,வருடம், சரியாக இருக்கின்றதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள் * ✍ கீழ் உள்ள இணைய முகவரிக்கு சென்று   portal.incometaxindiaefiling.gov.in/e-Filing/Services/LinkAadhaarHome.html?lang=eng ✍ *பான் எண் மற்றும் ஆதார் எண்ணை சரியாக பதிவு செய்து, ஆதார் அட்டையில் எவ்வாறு உள்ளதோ அதே போல தனது பெயரை பதிவு செய்து, கேப்சா கோட் எனப்படும் ஆங்கில எழுத்து மற்றும் எண்களை அப்படியே பதிவு செய்தால் போதும்.* ✍ *ஆதார் எண் சரிபார்த்த பிறகு, ஆதார் எண்ணும், பான் எண்ணும் இணைக்கப்படும்.* ✍ *இதனை உறுதி செய்வதற்கான தகவல் இணையதளத்தில் வரும்.* ✅ *அல்லது* ✅  *எஸ்.எம்.எஸ். மூலமாகவும்  இனைக்கலாம்* உங்கள் போனில் UIDPAN என்று டைப் செய்து இடை வெளி  விட்டு 12 இலக்க ஆதார் எண்ணையும், அதன் பிறகு மீண்டும் இடைவெளி விட்டு 10 இலக்க பான் எண்ணையும் டைப் செய்ய வேண்டும்...!* இந்தத் தகவலை 567678 அல்லது 56161 என்ற எண்களில் ஏதேனும் ஒன்றுக்கு எஸ்.எம்.எஸ்  அனுப்பினாலே பான் எ

தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை! தமிழக அரசு அறிவிப்பு.

Image
தள்ளுவண்டி கடைகள் நடத்த மாற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை! தமிழக அரசு உத்தரவு. தமிழ்நாட்டில் சாலையோரங்களில் தள்ளுவண்டி கடைகள் நடத்திட மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளித்திடும் வகையில் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.   அதன்படி சென்னையில்   தள்ளுவண்டி கடைகள்  மற்றும் தெருவில் விற்பனை செய்பவர்கள் ரூபாய் 100 ரூபாய் செலுத்தி பதிவு சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயமாகும்.  மேலும் அனைத்து விதமான சிறிய மற்றும் பெரிய உணவு விற்பனை மற்றும் நட்சத்திர விடுதி வரை உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் பெற வேண்டியதும் கட்டாயம். இந்நிலையில் சாலை ஓரங்களில் தள்ளுவண்டி கடைகள் நடத்துவதில் தகுதியுள்ள மாற்றுதிறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கிடவும்,  மாற்றுத்திறனாளிகளுக்கு கடைகளை நடத்த நகர விற்பனை குழுவின் விதிமுறைகளுக்கு இணங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும்  அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மண்டலம் மற்றும் வார்டு அடிப்படையில் ஒதுக்கீடு செய்யும் போது முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றும் மற்றும் மாற்று திறனாளிகளின் வீடுகளுக்கு அருகில் விற்பனைக்கு உரிய இடங்களாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும் கடைகள் அமைக்க

ஓட்டுநர் உரிமம் இருந்தால் மட்டுமே வாகன காப்பீடு! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

Image
லைலென்ஸ் இருந்தால் மட்டுமே இனசூரன்ஸ்! நீதிமன்றம் அதிரடி! வாகனங்களுக்கு காப்பீடு செய்யும் போது அதன் உரிமையாளர்களுக்கு ஓட்டுனர் உரிமம் இருக்கிறதா என  இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தினேஷ்குமார் என்பவர்  கடந்த 2019 ஏப்ரல் 18ம் தேதி நடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்து விட்டு தனது சகோதரர் பைக்கில் வந்து கொண்டிருந்தார். அப்போது திருவள்ளூர் ,சென்னேரி ஆரம்ப சுகாதார நிலையம் அருகே எதிரே வந்த மற்றொரு பைக் மோதியதில் தினேஷ்குமார் உயிரிழந்தார். இதையடுத்து தினேஷ்குமாரின் பெற்றோர் ஒன்றரை கோடி ரூபாய் இழப்பீடு கோரி சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விபத்தை ஏற்படுத்திய பைக்கை ஓட்டி சென்றவருக்கு ஓட்டுனர் உரிமம் இல்லை என்றாலும், மோட்டார் சைக்கிள் காப்பீடு செய்யப்பட்டுள்ளதால், காப்பீடு நிறுவனம் மனுதாரர்களுக்கு மொத்தம் 64 லட்சத்து 33 ஆயிரத்து 200 ரூபாய் இழப்பீடாக ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டி அடிப்படையில் வழங்க வேண்டும் என அதிரடி  உத்தரவிட்டார். மேல

சுங்கச்சாவடிகள் அகற்றம்! மத்திய அரசு புதிய திட்டம்.

Image
சுங்கச் சாவடிகள் அகற்றம்! மத்திய அரசு புதிய திட்டம்.                   GET NEWS COVER நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து   ஃபாஸ்டேக் முறை அமலுக்கு வந்தது. இதன் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கால விரயம், சில்லறைத் தட்டுப்பாடு, எரிபொருள் வீணாவது போன்ற சிக்கல்கள் தீர்க்கப்பட்டன.  ஒட்டுமொத்தமாக 90% சுங்கச்சாவடிகளில் இருக்கும் ஐந்து நுழைவாயில்களில், 4 நுழைவாயில்கள்  ஃபாஸ்டேக் பரிவர்த்தனைக்காக  ஒதுக்கப்பட்டன. ஒன்றில் மட்டும்  பணமாக சுங்கவரியை செலுத்த முடியும். எனினும் இத்தகைய நடைமுறையில் தொடர்ந்து சிக்கல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாடு முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து  சுங்கச்சாவடிகளை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக "நம்பர் பிளேட் ரீடர்" என்ற புதிய நடைமுறையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட ஒரு சில  இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள், பொருத்தப்பட்டு அவ்வழியாக செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டை அடையாளம் காணும்.

பத்திரங்கள் பிழை திருத்தல் பற்றிய 20 தகவல்கள்

Image
பத்திரம் பிழை திருத்தம் பற்றிய 20 தகவல்கள். பத்திரம் பிழை திருத்தல்  பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய  முக்கியமான 20 தகவல்கள். 1. பத்திரத்தில் ஏற்படும் சிறு சிறு எழுத்து மற்றும் வார்த்தை பிழைகள் சரிசெய்வதே பிழைத்திருத்தல் பத்திரம். அதனைச் சரிப்படுத்தும் ஆவணம் (அல்லது) சீர் செய் ஆவணம் ( RECTIFICATION DEED) எனப்படும். 2. கிரையம், செடில்மெண்ட், பாகப்பிரிவினை, உயில் சாசனம், பவர் பத்திரம், மற்றும் அடமானம், விடுதலை, அக்ரிமெண்ட் போன்ற அனைத்து ஆவணங்களையும் பிழைத்திருத்தல் பத்திரம் போடலாம். 3. சாதாரணப் பிழை திருத்தல் பத்திரம், உரிமை மாறக்கூடிய பிழைத்திருத்தல் பத்திரம் என இரண்டு வகைப் பத்திரங்கள் இருக்கிறது. 4. திசைகள், ஊர் பெயர், தன்னுடைய பெயர் என யாருக்கும் எந்தவித பெரிய மாற்றங்கள் இல்லாமல் தனக்கு மட்டுமே பிரச்சனையாகவே உள்ள பிழைகள் போன்றவைகள்  சாதாரணப் பிழைகள். 5. பட்டாவையும், பத்திரத்தையும் காணும்போது. பட்டாவில் உள்ள பெயரும், பத்திரத்தில் உள்ள பெயரும் நேராக இல்லையெனில் சொத்தை வாங்கப் பலர் தயங்குவர். அதனால் இந்தச் சாதாரணப் பிழைத்திருத்தல் பத்திரம் போடப்படுகிறது. 6. செக்கு பந்தியில

புதிய வாகன பதிவு கட்டணம் மற்றும் சேவை கட்டணம் உயர வாய்ப்பு! முழு விவரம் என்ன?

Image
தமிழ்நாட்டில் வாகனப்பதிவு, ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட சேவை கட்டணம் 10 மடங்கு உயர வாய்ப்பு!  தமிழ்நாட்டில் புதிய வாகனப்பதிவு,மற்றும் ஓட்டுனர் உரிமம் வழங்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான  போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணம் தற்போது 10 மடங்கு உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி,  1. தற்காலிக வாகனப் பதிவு மற்றும் பதிவு நீட்டித்தலுக்கான கட்டணம் ரூ.50 ல் இருந்து ரூ.200 ஆக உயர்த்தப்பட உள்ளது. 2.  தகுதி சான்று பெற  இதுவரையில் கட்டணம்  வசூலிக்கப்படாத நிலையில், இனிமேல்  ரூ.500/− கட்டணம். 3. தகுதி சான்று நகல் பெற ரூ.250 கட்டணம் . 4. தகுதி சான்று பெறாத வாகனங்களை திரும்ப பெற சி.எப்.எக்ஸ் நோட்டீஸ் பெறும்போது செலுத்தும் கட்டணம் ரூ.30 ல் இருந்து ரூ.500 ஆக உயர்த்தப்பட உள்ளது. 4. வாகன சோதனை மையங்களுக்கான அனுமதி பழைய கட்டணம் ரூ.1000ல் இருந்து ரூ.5000 ஆகவும், 5.அனுமதி புதுப்பித்தல் கட்டணம் ரூ.500ல் இருந்து ரூ.3000 ஆகவும் உயர்த்தபட உள்ளது.  இந்த புதிய கட்டண உயர்வு இந்த மாதம் இறுதி முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

கையொப்பமும் தமிழ்! முன்னெழுத்தும் ( Initial) தமிழ்! பள்ளி கல்வித்துறை புதிய உத்தரவு.

Image
கையொப்பமும் தமிழ்! முன்னெழுத்தும் தமிழ்! பள்ளி மாணவர்களுக்கு புதிய உத்தரவு. தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் இனிமேல் தங்களின் கையொப்பத்தையும் இனிஷியலையும் (பெயரின் முன்னெழுத்து) தமிழில்தான் குறிப்பிட வேண்டும் என்று மாணவர்கள், மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மாணவர்களுக்கும், தலைமை ஆசிரியர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்குமாறு அனைத்து மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும் போது அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டுவரவும் மாணவர்கள் பள்ளிக்கு சேர அளிக்கும் விண்ணப்பம், வருகை பதிவேடு பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையினை கொண்டு வரவும். மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது. மேலும், முன்னெழுத்தும் தமிழில் கையொப்பமும் தமிழில் என கீழ்க்கண்டவாறு சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப்படுத்திடலாம் எனவும்

தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

Image
தமிழகத்தில் மேலும் 5 நாட்களுக்கு மழை நீடிக்க வாய்ப்பு!   GET NEWS COVER       22.08.2022 தமிழகத்தின் கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக  பல்வேறு மாவட்டங்களில் வரும் 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் நாளை மறுநாள் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் அறிவிப்பு.

Image
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா? தமிழகத்தில் வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் கோவை,நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு  வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று(20.8.2022) முதல் வரும் 5 நாட்களுக்கு தமிழகம்,மற்றும்  புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் வரும் 23 மற்றும் 24ம் தேதிகளில் தமிழக மாவட்டங்களான கோவை,நீலகிரி,திருப்பூர்,தேனி, திண்டுக்கல்,ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும்  சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"பெண்கள் பாதுகாப்பு" தமிழ்நாடு அரசு திருத்தங்கள் அரசிதழில் வெளியீடு.

Image
" பெண்கள் பாதுகாப்பு" தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியீடு! பெண்கள் பாதுகாப்பு குறித்து தமிழ்நாடு அரசு மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்கள் செய்து அரசிதழ் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன விதிகளில்  வரைவு திருத்தங்கள் உருவாக்கப்பட்டு அது தொடர்பாக கருத்துக்கேட்கப்பட்ட நிலையில், விதிகளை திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது.  அதன்படி,   1. வாகனத்தில் பயணிக்கும் ஆண் பயணி, பெண் பயணிகளை முறைத்துப் பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக புண்படுத்தக்கூடிய சைகைகள், பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுப்பது கூடாது எனவும் 2. வாகனத்தில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு எரிச்சல் ஏற்படுத்த கூடாது. மேலும் நடத்துனர் எச்சரிக்கை விடுத்தப் பிறகு, புகாருக்குள்ளான பயணியை இறக்கிவிடலாம் அல்லது வழியில் உள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம் எனவும்,  3. பெண் பயணிகள் வாகனத்தில் ஏறவோ, இறங்கவோ உதவும்போது தவறான நோக்கில் தொடக்கூடாது. 4. பெண் பயணி வாகனத்தில் பயணிக்கும் போது, பயணத்தின் நோக்கம் குறித்து பொருத்தமற்ற

மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள்.

Image
மத்திய உள்துறை அமைச்சகத்தில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பியுங்கள் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் துறை : மத்திய உள்துறை அமைச்சகம் பணியின் பெயர் :  Executive ,  junior intelligence officer,  security assistant and etc. மொத்த காலி பணியிடங்கள் : 766   கல்வித் தகுதி : 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ.. சம்பளம் : ரூ.21,700 - ரூ.1,51,100 வயதுவரம்பு : 56 வயதுக்குள்    தேர்வுமுறை : எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.8.2022   விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 S P Marg, Bapu Dham, New Delhi - 110 021  மேலும் விவரங்களுக்கு http://www.mha.gov.in என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதல்வர் பரிசு தொகை!

Image
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு பரிசுத்தொகை!  முதல்வர் வழங்கினார். இங்கிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழ்நாடு வீரர்களுக்கு ரூ 4.31 கோடி பரிசுத்தொகையை  முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதன்படி பதக்கம் வென்ற தமிழக வீரர் சரத் கமலுக்கு ரூ.1.8 கோடி, மற்றும் சத்யனுக்கு ரூ.1 கோடியும், சவுரவ் கோசலுக்கு ரூ.40 லட்சமும், தீபிகா பல்லிகலுக்கு ரூ.20 லட்சமும், பயிற்றுனர்களுக்கு ரூ.51 லட்சம், பவானி தேவிக்கு ரூ.35 லட்சம், பிரனவ் வெங்கடேஷ்க்கு ரூ.5 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன்,   ஒலிம்பிக் தங்க வேட்டை திட்டத்தில் வீரர்கள் கண்டறியப்பட்டு ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கு தயார்படுத்தப்படுவார்கள் என்று கூறினார்.

IRCTC−யில் வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிக்கலாம்.

Image
IRCTC யில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!உடனே விண்ணப்பிக்கலாம். IRCTC இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்   விருந்தோம்பல் கண்காணிப்பு (Hospitality Monitor ) மொத்த காலியிடங்கள் 60 கல்விதகுதி        :        BSc சம்பளம்                :        ரூ 30,000 /- வயது வரம்பு    :          28 க்குள் தேர்வு  முறை   :     நேர்காணல் நேர்காணல் தேதி :     28.08.2022 விண்ணப்பிக்கும் முறை http://www.irctc.com   என்ற இணையதளத்தில் சென்று HR மற்றும் Career க்ளிக் செய்து பின்னர் New openings ல் சென்று விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.  உரிய ஆவணங்களுடன் குறித்த தேதியில் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.

இன்னும் 4 நாட்களுக்கு கனமழை தொடரும்வானிலை மையம் அறிவிப்பு

Image
தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.   தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெரும்பாலான மாவட்டங்களில் பெய்து வருகிறது. மேற்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேட்டூர் மற்றும் பவானிசாகர் அணைகளில் அதிக அளவு நீர் வரத்து காரணமாக அணைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் கரையோரங்களில் உள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் அடுத்த நான்கு நாட்களுக்கும் தமிழகத்தில் கோயம்புத்தூர்,நீலகிரி, நாமக்கல்,திருப்பூர், ஈரோடு,ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இதற்காக அவசர உதவிகளுக்காக கட்டுப்பாட்டு எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. மீட்புபணிகளுக்காக நீலகிரி மாவட்டத்தில் இரண்டு குழுக்களும் திருச்சியில் இரண்டு குழுக்களும் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

TNPSC குரூப் 4 தேர்வு! விடைக்குறிப்பு (Answer key) வெளியீடு.

Image
TNPSC குரூப் 4 தேர்வு! விடைக்குறிப்பு வெளியீடு. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ( TNPSC ) நடத்திய குரூப் 4 தேர்வு கடந்த ஜுலை 24 அன்று நடந்தது. சுமார் 18.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இத்தேர்வை  எழுதினர்.  இந்நிலையில், மேற்படி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு (கீ ஆன்சர்) TNPSC இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இதில், ஏதேனும் உரிய ஆட்சேபணைகள் இருப்பின் அதன் விவரங்களை வரும் ஆகஸ்ட் 8-ம் தேதிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. விடைக்குறிப்பை பெற கீழ்கண்ட இணையதளத்தில் சென்று பார்க்கவும். www.tnpsc.gov.in