Posts

Showing posts from July, 2022

நில அளவையர், வரைவாளர் அரசு பணி வேலைவாய்ப்பு! TNPSC அறிவிப்பு.

Image
TNPSC- நில அளவையர் மற்றும் வரைவாளர் பணிக்கு அறிவிப்பு வெளியீடு! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நில அளவையர் (Field Surveyor), வரைவாளர் (Draftsman), உதவி வரைவாளர் (Surveyor Cum Draughtsman) காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   மொத்த காலியிடங்கள் நில அளவையர் பணிக்கு 798 இடங்கள் வரைவாளர் பணிக்கு 236 இடங்கள், மற்றும் உதவி வரைவாளர் பணிக்கு 55 இடங்கள் ஆக மொத்தம் 1089 காலியிடங்கள். மாத சம்பளம்-     ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை    வயது வரம்பு -   32 வயதுக்குள் இருக்க வேண்டும். ( எஸ்சி, எஸ்சி(ஏ), எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி(ஓபிசிஎம்) பிசிஎம், மற்றும் கணவரை இழந்த பெண்கள் ஆகியோர்களுக்கு வயது வரம்பு கிடையாது. ) கல்வி தகுதி    நிலஅளவையர், வரைவாளர் பணிக்கு டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் முடித்திருக்க வேண்டும் அல்லது  தேசிய தொழிற் பயிற்சி கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  உதவி வரைவாளர் பணிக்கு மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின் கீழ் டிராப்மேன் ஷிப்(சிவில்) முடித்திருக்க வேண்டும்   விண்ணப்பிக்க கடைச

தமிழ்நாட்டில் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல்! தமிழக அரசு அறிவிப்பு.

Image
 தமிழ்நாட்டில் விரைவில் கூட்டுறவு சங்க  தேர்தல்!  தமிழக அரசு அறிவிப்பு.     தமிழகத்தில் விரைவில் கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இந்த தேர்தலை நடத்த தேர்தல் ஆணையராக பொதுப்பணித்துறை செயலாளரான தயானந்த் கட்டாரியா IAS அவர்களை நியமனம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது.  மேலும் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் என்பதை 3 ஆண்டுகளாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதற்கான திருத்தச் சட்ட முன் வடிவை கடந்த ஜனவரி 7 ம் தேதியன்று தமிழக சட்டபேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி கடந்த கொண்டு வந்தார்.  அனைத்து வகையான கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலங்களும் வரும் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கடைசியாக கடந்த  2018ம் ஆண்டு தான் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது .

44வது செஸ் ஒலிம்பியாட்! டிக்கெட் விலை விவரம் மற்றும் மொபைல் மூலம் பார்க்க ஏற்பாடு! முழு விவரம்

Image
44வது செஸ் ஒலிம்பியாட்! டிக்கெட் விலை வெளியீடு மற்றும் மொபைலில் பார்க்கும் வசதி! முழு விவரம்! 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வரும் ஜூலை 28ம் தேதி செஸ் தொடக்க விழாவுடன் தொடஙகுகிறது.29ம் தேதி முதல் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2500க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர். இந்த ஒலிம்பியாட் போட்டி முதல் முறையாக இந்தியாவில் நடக்கும் தொடரை நடத்தும் வாய்ப்பை தமிழகம் பெற்றிருப்பதால், செஸ் ஒலிம்பியாட்டை உலகமே வியக்குமளவிற்கு நடத்தி அசத்தும் வகையில் தமிழக அரசு மிகச்சிறப்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.  செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நேரில் காண மாணவ மாணவியருக்கு ரூ.200-ரூ.300 ஆக டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  செஸ் போட்டியை நேரில் காண இந்தியர்களுக்கு ரூ.2000-3000 ஆகவும்,  வெளிநாட்டவர்களுக்கு ரூ.6000 முதல் ரூ.8000 ஆகவும் டிக்கெட் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் செஸ் போட்டிகளை மொபைல் மூலம் இண்டெர்நெட்டில் பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  Chess Olympiad, Live Chess, Chess 24 ஆகிய இணையதளங்கள் மூலம் செஸ் போட்டிகளை நேரலையாக

கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலி! பள்ளிகளுக்கு புதிய உத்தரவுகள்.

Image
கள்ளக்குறிச்சி சம்பவம் பள்ளிகளுக்கு தமிழக அரசு புதிய உத்தரவு. கள்ளக்குறிச்சியில் சமீபத்தில்  மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .   இந்நிலையில்,தமிழக அரசின் பள்ளிகல்விதுறை தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும்  புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.   அதன்படி,   1. பள்ளிகளில் மாணவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளுதல், ஆசிரியர்கள் மோதல், பாலியல் வன்முறை, சத்துணவில் பல்லி விழுதல், சாலை விபத்து உள்ளிட்ட ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் உடனடியாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (சிஇஓ) கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.  2. சிஇஓ-வின் அனுமதி பெற்ற பிறகே, ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். குடிநீர், கழிப்பறை, ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர் எண்ணிக்கை, ஆசிரியர் காலியிட விவரம் போன்ற எதையும் ஊடகங்களுக்கு சிஇஓ அனுமதியின்றி தெரிவிக்கக் கூடாது.  3. பள்ள

தமிழகத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை? முழு விவரம்.

Image
தமிழகத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு                       GET NEWS COVER தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் இன்று 23.7.2022 தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் கனமான மழை பெய்தது. இந்நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் 23 மாவட்டங்களில் நாளை லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,  கோவை  சேலம்  நீலகிரி  ஈரோடு  சேலம்  திருப்பூர்.  கிருஷ்ணகிரி  தர்மபுரி  செங்கல்பட்டு  காஞ்சிபுரம்  கடலூர் சிவகங்கை இராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்

44வது செஸ் ஒலிம்பியாட் இலவச பேருந்து சேவை அறிவிப்பு

Image
செஸ் ஒலிம்பியாட் தமிழக அரசு இலவச பேருந்து சேவை அறிவிப்பு.   தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறுகிறது இதில் 180 க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. இந்நிலையில் தமிழக அரசின் சுற்றுலாத்துறை வளர்ச்சி கழகம் இதற்காக பொதுமக்களுக்கு வருகிற 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இலவச பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது சென்னை மத்திய கைலாஷ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு எஸ் ஆர் பி டூல்ஸ் முட்டுக்காடு வழியாக 19 இடங்களில் பேருந்து நின்று மாமல்லபுரம் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மணி நேரத்திற்கு ஒரு இலவச பேருந்து சேவை அறிவிக்கப்பட்டுள்ளது .

TNPSC குரூப் 1 தேர்வு அறிவிப்பு வெளியீடு.

Image
TNPSC குரூப் 1 தேர்வுக்கு அறிவிப்பு வெளியீடு. NEWS COVER  21.07.2022 தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(TNPSC)  இந்தாண்டு குரூப் 1 பதவிகளுக்கு காலியாக உள்ள 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.  மொத்த காலி பணியிடங்கள் : 92 ( துணை ஆட்சியர் : 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25,  கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 )  விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.08.2022 விண்ணப்பிக்கும் முறை :   இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்  முதல் நிலை தேர்வு: 30.10.2022 நேரம் : காலை 9.30 முதல் 12.30 வரை கல்வி தகுதி : ஏதாவது பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  மேலும் ஆன்லைன் வழி விண்ணப்பங்களை ஆகஸ்ட் 27ம் தேதி முதல் 29ம் தேதி பிற்பகல் 11.59 மணி வரை திருத்தம் செய்து செய்யலாம். மேலும் விவரங்களுக்கு TNPSC இணையதளத்தில் பார்க்கவும். 

சுங்கசாவடியில் வேகமாக வந்து மோதிய ஆம்புன்ஸ்! பதைபதைக்கும் காட்சி.

Image
சுங்கசாவடியில் வேகமாக வந்து மோதிய ஆம்புலன்ஸ்! பதைபதைக்கும் காட்சி. கர்நாடக மாநிலம்  ஷிரூர் பகுதியில் உள்ள சுங்கச்சாவடியில்  நேற்று மாலை 4 மணி அளவில் ஆம்புலன்ஸ் ஒன்று டோல்கேட்டை கடக்க வேகமாக வந்து கொண்டிருந்தது.   ஆம்புலன்ஸுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில்  மூன்று தடுப்பு கட்டைகளில் இரண்டு அகற்றப்பட்டது. மற்றொன்றை டோல்கேட் ஊழியர் அகற்றிக் கொண்டிருக்கும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.  தடுப்புகள் மீது மோதாமல் இருக்கவும், டோல்கேட்டில் மெதுவாக செல்லவும் ஆம்புலன்ஸ் டிரைவர் வேகத்தை குறைக்க பிரேக் பிடித்தார். அப்போது ஆம்புலன்ஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் ஆம்புலன்ஸ்  பாய்ந்து வந்து டோல்கேட் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த நோயாளி, மற்றும் 2 உதவியாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் டோல்கேட் ஊழியர் ஒருவரும் உடல் நசுங்கி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரித்தது. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி வருகிறார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் ஓட்டைநரை மீட்டு மருத்துவமனைக்கு

கலவரத்தில் சான்றிதழ்களை இழந்தவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க நடவடிக்கை! அமைச்சர் அறிவிப்பு

Image
கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் வழங்க நடவடிக்கை.அமைச்சர் அறிவிப்பு. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி கலவரத்தில் சான்றிதழ் இல்லாத மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார் கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் பெரும் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பள்ளியின் சொத்துக்கள் மேஜை நாற்காலிகள், பேருந்துகள், மின்விசிறிகள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் சான்றிதழ்கள் அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி கலவரத்தில் சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு வருவாய்த்துறை மூலம் புதிய சான்றிதழ்கள் வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை. வானிலை மையம் அறிவிப்பு

Image
தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி,மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் எனவே  மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம்  என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.      *************************************

நாளை முதல் தனியார் பள்ளிகள் வேலைநிறுத்தம்! முழு விவரம்

Image
தனியார் பள்ளிகள் நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டம்! தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவிப்பு. NEWS COVER  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியூர் என்ற பகுதியில், இயங்கி வரும் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சக்தி இண்டர்நேஷ்னல் பள்ளியில், 12 ம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்துகொண்டார். அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு  விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நாளை இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் சூழ்நிலையில், தமிழக காவல்துறையின் பாதுகாப்பை மீறி, போராட்டகாரர்கள் பள்ளிக்குள் நுழைந்து, பள்ளி வாகனங்களுக்கு தீவைத்து, காவல்துறையினரின் வாகனங்களுக்கு எல்லாம் தீவைத்தனர். அந்த பள்ளியில் இருந்த மாணவர்களின் சான்றிதழ்கள், ஆசிரியர்களின் சான்றிதழ்கள், விடுதியில் இருக்கின்ற சிலிண்டர் உள்பட அனைத்தையும் தீக்கிரையாக்கின. பள்ளி ஆய்வகத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் களவாடப்பட்டிருக்கிறது. மேஜை நாற்காலிகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது. பள்ளி வாகனங்களை தீவைத்து கொளுத்தியுள்ளனர். இதன் மூலம் அந்த பள்ளியில் 50 கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.   தனியா

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்.. இனி ஆடியோவையும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்..!

Image
வாட்ஸ் அப் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புது புது அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது.  தற்போது வாட்ஸப்பில் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டுமே ஸ்டேட்டஸாக வைக்கும் வசதி உள்ளது இந்நிலையில்  வாட்ஸப் ஸ்டேட்டஸாக ஆடியோவை வைப்பதற்க்கு நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த ஆடியோ ஸ்டேட்டஸ், வழக்கமான ஸ்டேட்டஸ் போன்று எழுத்து, எமோஜியை பயன்படுத்தி வைக்கலாம். அதுமட்டுமின்றி, வழக்கமான ஸ்டேட்டஸ் போன்று இதையும் வாட்ஸ்அப் பயனர்கள் தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே காண்பிக்கும் வகையில் இருக்கிறது. தற்போது பீட்டா பயனாளர்களுக்கு சோதனையில் உள்ள இந்த ஆடியோ ஸ்டேட்ட்ஸ் விரைவில் அனைத்து பயனாளர்களுக்கும் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது

நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு ...முழு விவரம்

Image
நீதிமன்றத்தில் 8ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு ...முழு விவரம் பணியின் பெயர்:- Office Assistants and other கல்வித் தகுதி:- Office Peon(Munshi/ Attendant) பணிக்கு 8 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் வயது வரம்பு:- விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தேர்வு செய்யப்படும் முறை:- விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்  விண்ணப்பிக்கும் முறை:- கீழ் உள்ள லின்ங்கில் உள்ள விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபாலில் அனுப்பலாம் தபால் முகவரி:- Chairman/ Principal District Judge,  District Legal Services Authority,  ADR Building,  Sathuvachari,  Vellore-632009. விண்ணப்பிக்க கடைசி தேதி :- 20.07.2022 மேலும் விவரங்களுக்கு:- https://districts.ecourts.gov.in/sites/default/files/LADCS%20Notification.pdf