Posts

Showing posts from October, 2022

உயிருடன் புதைக்க 42 லட்சம்!! ரஷ்யாவில் வினோதம்!!

Image
உயிருடன் கல்லறையில் புதைக்க 42 லட்சம்!! ரஷ்யாவில் வினோதம்!!முழு விவரம் என்ன? GET NEWS COVER ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள கல்லறையில் பிரகடெட் என்ற நிறுவனம் உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கும் தெரபியைச் செயல்படுத்தி வருகின்றனர். இதனை சைகிக் தெரபி என்று அழைக்கின்றனர். இதன் மூலம் ஆன்சைடியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உயிருடன் குழியில் புகைக்கின்றனர். அவ்வாறு புதைப்பதன் மூலம் அவர் அதனை எதிர்த்துப் போராடக் கூடிய திறன் கிடைக்கும் என்று அந்த நிறுவனம் கூறுகிறது. இதற்காக அதிகபட்ட கட்டணமாக இந்திய மதிப்பு படி ரூ.42 லட்சம்  வசூலிக்கப்படுகிறது.  மேலும் இதில் குறைந்தபட்ச கட்டணமாக இந்திய மதிப்பில் ரூ.12 லட்சம் வசூலிக்கப்படுகிறது. இந்த சேவையை பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.  உயிருடன் ஒருவர் சவப்பெட்டியுடன் குழியில் இறங்குவதை நீங்கள் வீட்டில் இருந்த படியே பார்க்கலாம். இதுவும் ஒரு தெரபி தான் என்று நிறுவனம் கூறுகிறது. வீடியோவில் அவர்கள் உயிருடன் புதைப்பதைப் பார்க்கும் போது இறுதி அஞ்சலி ஏற்பாடுகள் உட்பட என்று வசதிகளும் செய்து தரப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. மேற்படி

ஆதார் மோசடி!! ஆதார் ஆணையம் எச்சரிக்கை!!

Image
ஆதார் நம்பர் மோசடி!! ஆதார் ஆணையம் எச்சரிக்கை!! முழு விவரம் என்ன? GET NEWS COVER ஆதார் கார்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்துவ அடையாளமாக இருந்து வருகிறது. அரசின் அனைத்து சேவைகளை பெறவும் ஆதார் கார்டு இணைப்பு அவசியமாகிறது. தற்போது வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது அப்படிப்பட்ட ஆதார் கார்டு எண்களை வைத்து தற்பொழுது பல்வேறு மோசடி செயல்கள் நடந்து வருகிறது.  ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என்றும் அதில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்களுக்கு OTP நம்பர் கேட்டு குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன. அவ்வாறு அனுப்பப்படும் குறுஞ்செய்திகளுக்கு OTP எண்களை யாரும் பகிர வேண்டாம் என்று ஆதார் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் மூலம் வங்கிக்கணக்கில் பணம் திருடப்படும் அபாயமும் உள்ளது.  மேலும் ஆதார் கார்டுகளை திருத்தம் செய்வதற்கு ஆன்லைன் மூலமாகவோ அல்லது அரசின்  ஆதார் மையங்கள் மூலமாக மட்டும்தான் மேற்கொள்ள வேண்டும் எனவும் இது போன்ற மோசடி நபர்களுக்கு OTP எணகளை பகிர வேண்டாம் என ஆதார் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆரஞ்சு அலர்ட்!! நவம்பர் 1,2 தேதிகளில் கனமழை எச்சரிக்கை!!....

Image
தமிழகத்துக்கு ஆரஞ்சு அலர்ட்!! நவம்பர் 1 மற்றும் 2 தேதிகளில் மிக கனமழை எச்சரிக்கை!! வானிலை ஆய்வு மையம் தகவல். GET NEWS COVER தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் துவங்கியது. இன்று தமிழகத்தின் பல மாவட்டங்களில் அதிகாலை முதலே லேசானது முதல் கனமானது வரை மழை பெய்து வருகிறது.  இந்நிலையில் வடகிழக்கு பருவமழை சற்று தீவிரமடைந்து வரும் நவம்பர் 1 மற்றும் 2 ம் தேதிகளில் லேசான மழை முதல் இடியுடன் கூடிய மிக கனமானது வரை மழை தமிழகம் மற்றும் புதுவையில் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மேலும் நவம்பர் 1 மற்றும் 2 ம் தேதிகளில் தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் ( ORANGE ALERT ) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 3 ம் தேதிக்கு பிறகு மழை படிப்படியாக குறைந்து சில நாட்களுக்கு பின்னர் மீண்டும் அதிகரிக்க கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மாதம் ரூபாய்1000 உதவித்தொகை!! நவம்பர் 1 முதல் விண்ணப்பிக்கலாம்!

Image
புதுமை பெண் திட்டம்!! நவம்பர் 1 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்! தமிழக அரசு அறிவிப்பு. GET NEWS COVER அரசுப்பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்து மேற்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம் உதவித் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.முக.ஸ்டாலின் அவர்களால் கொண்டுவரப்பட்டது. இதுவரை 1.13 லட்சம் மாணவிகள் இத்திட்டத்தில் உதவி தொகை பெற்று பயனடைந்துள்ளனர் மேலும் தற்போது வரும் நவம்பர் 1ம் தேதி முதல் இந்த உதவித்தொகையை பெற தமிழக அரசின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களுக்கு; https://www.pudhumaipenn.tn.gov.in   என்ற இணையதளத்தில் பார்க்கவும்.

செங்கல்பட்டு அருகே பயங்கரம்!! புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்!

Image
புதைக்கப்பட்ட சிறுமியின் தலையை மட்டும் எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்!! செங்கல்பட்டு அருகே பயங்கரம்! போலீஸ் விசாரணை. GET NEWS COVER செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்துள்ள சித்திரவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் இவரது 12 வயது மகள் அங்குள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 5 ம் தேதி அவர் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது பக்கத்தில் உள்ள மின்கம்பத்தில் மின்வாரிய ஊழியர் வேலை செய்து கொண்டிருந்தபோது பாழடைந்த மின்கம்பம் உடைந்து அருகில் இருந்த சிறுமியின் மேல் விழுந்தது.இதில் படுகாயம் அடைந்த சிறுமி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கலந்த 14ஆம் தேதி சிறுமி உயிர் இழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுமியின் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்து வந்து அங்குள்ள மயானத்தில் சிறுமியை அடக்கம் செய்தனர்.  இந்நிலையில் நேற்று மயானத்தில் சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் ஒரு பக்கம் தோண்டப்பட்டதற்கான அடையாளம் இருந்தது மேலும் அங்கு மஞ்சள் தூள் தலை முடி உட்பட சில மர்மமான பொருட்கள்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 29ல் தொடங்குகிறது!! வானிலை மையம் தகவல்.

Image
அக்டோபர் 29ல் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! வானிலை ஆய்வு மையம் தகவல். GET NEWS COVER தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழெடுக்க சுழற்சி காரணமாக கலந்து சில நாட்களாக தமிழகம் மற்றும் புதுவையில் ஆங்காங்கே மழை பெய்து வந்தது.  இந்நிலையில் அந்தமான் கடல் அருகே உருவான சிற்றாங் புயல் நேற்று ஒடிசா அருகே அதிகாலை கரையை கடந்தது. தமிழகத்தில் சற்றே மழை ஓய்ந்திருந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் புதுவை மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வரும் 29ஆம் தேதி முதல் தொடங்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனையடுத்து நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தின் நாகை மயிலாடுதுறை திருவாரூர் தஞ்சாவூர் கடலூர் விழுப்புரம் சேலம் ஈரோடு திருப்பூர் கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் எனவும் காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே லேசானது முதல் கனமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் கடலோர பகுதிகளான மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கில

2022 ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் பற்றிய தகவல்கள்!

Image
2022 ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்! முழு விவரம்! GET NEWS COVER தீபாபளி பண்டிகையின் மறுநாளான இன்று (25.10.2022) மாலை இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நிகழ உள்ளது. சூரிய கிரகணம் என்றால் என்ன?   சூரியன் பூமி மற்றும் சந்திரன் ஆகிய மூன்றும் கிட்டதட்ட ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கும் போது சூரியணை சந்திரன் மறைக்கும் நிகழ்வு சூரிய கிரகணம் எனப்படும். அந்த சமயத்தில் சூரிய ஒளி படாமல் சந்திரனை காணலாம்.  சூரியணை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனப்படும். சூரியணின் ஒரு பகுதியை மறைத்தால் அது பகுதி நேர சூரிய கிரகணம் எனப்படும். மேலும் சூரியனை சந்திரன் முழுமையாக மறைக்க முடியாத சமயங்களில் சூரியணின் வெளிவட்ட விளிம்புகள் வெளியில் தெரிந்தால் அது வளைய சூரிய கிரகணம் எனப்படும். மேலும் இன்று இந்தியாவில் நிகழ இருப்பது பகுதி நேர சூரிய கிரகணம் ஆகும். இந்திய நேரப்படி இன்று மாலை 4.29 மணிக்கு தொடங்கி மாலை 5.40 மணி வரை இந்த சூரிய கிரகணம் நிகழும் என்று மத்திய புவி அறிவியல் துறை தெரிவித்துள்ளது. கிரகணத்தின் போது செய்ய கூடாதவை × இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது. × கர்ப்பிணி

ஆசிரியர் நியமன வயது வரம்பு உயர்வு! தமிழக அரசு அரசாணை

Image
ஆசிரியர் நியமன வயது வரம்பு உயர்வு!! தமிழக அரசு அரசாணை. GET NEWS COVER தமிழ்நாடு அரசு ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பினை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது.  அதன்படி, ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு 40 ல் இருந்து 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இதர பிரிவினருக்கான வயது வரம்பும் 45 ல் இருந்து 50 வயது வரை உயர்த்தபட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசின் தலைமை செயலகம் அரசாணை வெளியிட்டுள்ளது.

25 ஆம் தேதி கரையை கடக்கிறது SITRANG புயல்!! தமிழகத்திற்கு பாதிப்பா??

Image
25 ஆம் தேதி கரையை கடக்கிறது SITRANG புயல்!!  இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். GET NEWS COVER அந்தமான் கடல் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக உருவாகி இருக்கும் SITRANG புயல் வரும் 25ஆம் தேதி அன்று அதிகாலை வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தமான் கடலின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறி புயலாக வலுப்பெற்று வரும் 25ம் தேதி அதிகாலை வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் SITRANG புயலின் காரணமாக பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் மத்திய உள்துறை அமைச்சகம் அம்மாநில அரசை உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!

Image
மருந்து கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!!  மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு . GET NEWS COVER தமிழக மருந்து கட்டுப்பாட்டு வாரியம் தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மருந்து கடைகளுக்கும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சிலரை மறந்து விற்பனை கடைகள் போதை தரும் வகையான மருந்துகளை முறையான மருத்துவரின் பரிந்துரை சீட்டு மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமலோ கொடுப்பதற்கு தடை விதித்துள்ளது. மேலும் போதைப் பழக்கங்களுக்கும் அடிமையானவர்களுக்கு தவறான நோக்கத்திற்காக மருந்துகளை பயன்படுத்துபவர்களுக்கும் மருந்துகளை கொடுக்கக் கூடாது என்று கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அவ்வாறு மருத்துவரின் பரிந்துரை சீட்டு மற்றும் விற்பனை ரசீதுகள் இல்லாமல் மருந்துகளை கொடுப்பது தமிழ்நாடு மருந்து மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940 மற்றும் மருந்து விதி 1945 ன் கீழ் விதிமீறலாகும். அவ்வாறு மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மேற்படி மருந்துகள் யாருக்கேனும் தரப்பட்டால் மருந்து கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மேலும் 2 கோயில்களுக்கு ரோப் கார் வசதி!!அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு.

Image
தமிழகத்துக்கு மேலும் 2 கோயில்களுக்கு புதிய ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்!!  அமைச்சர் அறிவிப்பு. GET NEWS COVER தமிழகத்தில் மேலும் 2 கோவில்களில் ரோப் கார் வசதி விரைவில் ஏற்படுத்தி தரப்படும் என இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் மாண்புமிகு பி.கே.சேகர்பாபு சட்ட பேரவையில் அறிவித்தார். சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தான் சார்ந்துள்ள பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருநீர் மலை பெருமாள் கோவிலுக்கு ரோப் கார் வசதி எப்பொழுது ஏற்படுத்தி தரப்படும் என்று கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தமிழகத்தில் உள்ள ஐந்து கோவில்களுக்கு ஏற்கனவே ரோப் கார் அமைக்கும் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி திருத்தணி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம், சோளிங்கர், திருச்செங்கோடு, பழனி உள்ளிட்ட இடங்களில் ரோப் கார் அமைக்கும் பணிகளுக்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மேலும் இதுவரை அறிவிக்கப்படாத இடங்களான பழனி இடும்பன் மலை மற்றும் கோவை அனுவாவி ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றிற்கும் தற்பொழுது ரோப்

தமிழகத்தை அச்சுறுத்தும் "SITRANG" புயல்!! வானிலை மையம் எச்சரிக்கை.

Image
  தமிழகத்தை அச்சுறுத்தும் "SITRANG" புயல் தமிழக மக்களே உஷார்!! வானிலை மையம் எச்சரிக்கை. GET NEWS COVER மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி அடுத்த 24 காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் பின்பு மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி வரும் அக்டோபர் 22 ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கு SITRANG புயல் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா,தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் வரும் அக்டோபர் 22ம் தேதி முதல் 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிசிசிஐ யின் புதிய தலைவராக ரோஜர் பின்னி தேர்வு!

Image
பிசிசிஐயின் புதிய தலைவரானார் ரோஜர் பின்னி!!  பொதுக்குழு கூட்டத்தில் முடிவு. GET NEWS COVER இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) 91 வது ஆண்டு பொது குழு கூட்டம் இன்று மும்பையில் நடைபெற்றது. அதில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(BCCI) புதிய தலைவராக இந்திய அணியின் முன்னாள் வீரரான ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.  ஏற்கனவே பிசிசிஐயின் தலைவராக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வந்த இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தற்பொழுது பதவி விலகிய நிலையில் புதிய தலைவராக இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் முன்னாள் இந்திய அணி வீரரும் கர்நாடக கிரிக்கெட் சங்க நிர்வாகியுமான ரோஜர் பின்னி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மேலும் பிசிசிஐ யின் செயலாளராக ஜெய்ஷாவே தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு!!உடனடியாக விண்ணப்பியுங்கள்.

Image
ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு!!  உடனடியாக விண்ணப்பியுங்கள்! தமிழக முழுவதும் உள்ள நியாய விலை கடைகளில் விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4000 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர்   விற்பனையாளர்   கட்டுநர் மொத்த காலிபணியிடம்       4000 கல்வித்தகுதி விற்பனையாளர் பணிக்கு +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கட்டுநர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது வரம்பு 18 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். ( பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லீம்) மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மறறும் பழங்குடியினர் ஆகியோருக்கு வயது வரம்பு இல்லை) விண்ணப்ப கட்டணம் விற்பனையாளர் பணிக்கு150 ரூபாய் கட்டுநர் பணிக்கு 100 ரூபாய் ( SC/ST PWD/Widows உள்ளிட்டோருக்கு கட்டணம் இல்லை)  விண்ணப்பிக்க கடைசி தேதி       14.11.2022 விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழுடன் ஆதார் எண் வழங்கும் திட்டம்! மத்திய அரசு புதிய முடிவு.

Image
பிறப்பு சான்றிதழ் உடன் ஆதார் எண் வழங்க முடிவு!! மத்திய அரசு புதிய திட்டம். GET NEWS COVER குழந்தை பிறந்தவுடன் பிறப்பு சான்றிதழ் உடன் சேர்த்து ஆதார் எண்ணையும் வழங்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்க உள்ளது. தற்போது இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எனவே ஆதார் எண்ணை இனிமேல் குழந்தை பிறந்தவுடன் வழங்கப்படும் பிறப்பு சான்றிதழுடன் சேர்த்து வழங்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை 134 கோடி பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது குழந்தைக்கு 5 வயதாகும் போது கைரேகைகள் மற்றும் பயோமெட்ரிக் தரவுகள் சேர்க்கப்பட்டு பின்னர் அந்த குழந்தைக்கு 15 வயது ஆகும்போது பயோமெட்ரிக் விபரங்கள் அப்டேட் செய்யப்படுகிறது. தற்போது இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், விரைவில் நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை யுடிஏ (UIDAI) மேற்கொண்டு வருகிறது. மேலும் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் அல்லது செல்போன் எண் மாற்றம் ஆகியவற்றை ஆன்லைனில் எம்-ஆதார் செ

கல்லூரி மாணவி கொலை வழக்கு! கைதான இளைஞருக்கு வரும் 28ஆம் தேதி வரை காவல்.

Image
கல்லூரி மாணவி கொலை !வழக்கு கைதான இளைஞருக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல். GET NEWS COVER சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று மதியம் சத்யா என்ற கல்லூரி மாணவி சதீஷ் என்ற இளைஞரால் தண்டவாளத்தில் தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவி சத்யாவை அதே பகுதியில் வசிக்கும் சதீஷ் என்ற இளைஞர் கடந்த சில நாட்களாக காதலிக்க வற்புறுத்தி தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கல்லூரி செல்வதற்காக ரயில் நிலையத்துக்கு வந்த மாணவி சத்யாவிடம் அங்கு வந்த இளைஞர் சதீஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது ஆத்திரமடைந்த சதீஷ் ரயில் வரும்போது நடைமேடையில் இருந்து அந்த மாணவியை தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். ரயில் அடிபட்ட மாணவி சம்பவ இடத்திலேயே தலை சிதறி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து உடனடியாக அங்கிருந்து சதீஷ் தப்பி ஓடி விட்டார்.  தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி இளைஞர் சதீஷை தேடி வந்தனர். வழக்கு பதிவு செய்த போலீஸார் ஏழு தனிப்படைகள் அமைத்து தப்பியோடிய சதீஷை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்

ஆதார் எண் கட்டாயம்! தமிழ்நாடு மின்சார வாரியம் ( TANGEDCO) அறிவிப்பு.

Image
ஆதார் எண் கட்டாயம்! தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு. மின்சார கட்டணத்தில் சலுகைகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது தமிழகத்தில் மின் நுகர்வோருக்கு முதல் 100 யூனிட்கள் வரை இலவசம் உள்ளிட்ட  சலுகைகள் வழங்கப்படுகிறது.  அரசின் சார்பில் அளிக்கப்படும் அனைத்து வகையான சலுகைகள் மற்றும் சேவைகளுக்கு தற்போது ஆதார் எண் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.    ஆதார் எண் இல்லாதவர்கள் தங்களுக்கான எண் ஒதுக்கப்படும் வரை, வேறு வகையான ஆவணங்களை அளிக்கலாம். அதன்படி,  ஆதார் பதிவு சீட்டு,  ஆதார் எண்ணுக்காக விண்ணப்பித்த நகல்  வங்கி புத்தகம்   வாக்காளர் அடையாள அட்டை,  ரேஷன் கார்டு,  நிரந்தர கணக்கு எண்,  பாஸ்போர்ட்,  ஓட்டுநர் உரிமம்,   உள்ளிட்ட ஆவணங்களை அளிக்கலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.  மேலும் மின்சார கட்டணம் செலுத்தும்போது ஆதார் எண்ணை சமர்பிக்கலாம் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிராம உதவியாளர் காலி பணியிடங்கள் அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்!

Image
கிராம உதவியாளர் பணிக்கு 2748 காலி பணியிடங்கள் அறிவிப்பு. உடனே விண்ணப்பியுங்கள்! தமிழ்நாடு அரசு வருவாய் துறையில் கிராம உதவியாளர் பணிகளுக்கு மொத்தம் 2748 காலி பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணியின் பெயர் : கிராம உதவியாளர்  மொத்த காலியிடங்கள் : 2748 கல்வி தகுதி :  i) 5 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ii) சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். iii) தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். iv) விண்ணப்பதாரர்கள் 30.9.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். v) விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து நாளது தேதியில் வரை புதுப்பித்திருக்க வேண்டும்.   வயதுவரம்பு :  பொது பிரிவினருக்கு 32 க்குள் இருக்க வேேண்டும். பிற்படுத்தப்பட்டோர் , பிற்படுத்பட்டோர்(முஸ்லீம்) மிகவும் பிற்படுத்தப்பட்டோர் , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 37 வயது வரை விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.11.2022 ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும். https://agaram.tn.gov.in/onlineforms/

தமிழகத்திற்கு புதிய பேருந்துகள்! போக்குவரத்து துறை அறிவிப்பு.

Image
தமிழகத்திற்கு 1771 புதிய பேருந்துகள் போக்குவரத்து துறை அமைச்சர் அறிவிப்பு   தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்திற்கு புதியதாக 1771 BS IV ரக பேருந்துகள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய பேருந்துகள் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து துறை மண்டலங்களுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளது.  அதன்படி, சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு 402 பேருந்துகளும்,  விழுப்புரம் மண்டலத்திற்கு 347 பேருந்துகளும், சேலம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், கோவை மண்டலத்திற்கு 115 பேருந்துகளும், கும்பகோணம் மண்டலத்திற்கு 303 பேருந்துகளும், மதுரை மண்டலத்திற்கு 251 பேருந்துகளும், திருநெல்வேலி போக்குவரத்து மண்டலத்திற்கு 50 பேருந்துகளும் வழங்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் . அமைச்சர் அறிவிப்பு

Image
தமிழகத்தில் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்.  அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவிப்பு. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு இடையே ஜாதி மத பாகுபாடுகள் ஏதும் இல்லாமல்  பயிலும்  வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அவ்வப்போது பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் செயல்படும் பள்ளிகளில் எந்த ஒரு அரசியல் கட்சியின் அமைப்பினரும் எந்தவித கூட்டங்களையும் நடத்த அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி வளாகத்தில் எந்த ஒரு அரசியல் கட்சியினரும் கூட்டங்களை நடத்துவதற்கு அனுமதி கிடையாது என்றும் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் அனைத்து பள்ளிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

Image
தமிழகத்தில் நாளை கனமழைக்கு மீண்டும் வாய்ப்பு! வானிலை மையம் தகவல்   வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் இன்று இரவு முதல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பாக சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் விழுப்புரம் கடலூர் நாமக்கல் ஈரோடு திருப்பூர் சேலம் கோவை திருச்சி மதுரை கள்ளக்குறிச்சி திண்டுக்கல் நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக?மாவட்டங்கள் மற்றும் பாண்டிச்சேரி,காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை வரை செய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது